ஐக்கிய அரபு அமீரக அமைச்சருடன் கமல்ஹாசன் சந்திப்பு: இதுதான் காரணம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் ஐக்கிய அரபு அமீரக அமைச்சரை சந்தித்து பேசியதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவான ’விக்ரம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் சுமார் 400 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசனின் மாபெரும் வெற்றிக்கு தமிழ் திரையுலகினர் மற்றும் இந்திய திரையுலகினர் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சர் முபாரக் அல் நய்னன் என்பவரை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்த சந்திப்பு என்று கூறப்பட்டாலும் அடுத்த தலைமுறையினருக்கான சினிமா குறித்த கலந்தாய்வில் ஐக்கிய அரபு அமீரக அமைச்சருடன் கமல்ஹாசன் ஆலோசனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com