மாணவர்களை அகதிகள் ஆக்கும் அரசு: சென்னை பல்கலையில் கமல்ஹாசன் பேச்சு

  • IndiaGlitz, [Wednesday,December 18 2019]

குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முதல் போராடி வரும் நிலையில் இன்று போராட்டம் நடத்தி வரும் மாணவர்களை மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் அவர்கள் நேரில் சந்தித்தார்

சென்னை பல்கலைக்கழகம் வளாகத்திற்குள் செல்ல கமலஹாசனுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அவர் பூட்டப்பட்ட வாயிலில் ஒரு பக்கம் நின்று, மறுபக்கம் உள்ள மாணவர்களுக்கு அறிவுரை கூறும் வகையில் பேசினார்

சென்னை பல்கலைக்கழக மாணவி ஒருவர் தங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு தங்களை வெளியே போகச் சொல்கிறார்கள் என்றும் அடையாள அட்டையை காண்பித்தால் கூட உள்ளே விட அனுமதி கிடைக்கவில்லை என்றும் கமலஹாசனிடம் குற்றம் சாட்டினார். அதற்கு பதில் கூறிய கமல்ஹாசன், ‘நாட்டில் அகதிகள் அதிகமாகிவிட்டதால் குடியுரிமை சட்டத்தை அரசு கொண்டு வந்திருக்கிறது என்றும் ஆனால் தற்போது மாணவர்களை அகதிகளாக்கி உள்ளது என்றும் அவர் கூறினார்

இதனை அடுத்து சில நிமிடங்கள் மாணவர்களிடையே பேசிய கமல்ஹாசன் பின்னர் அங்கிருந்து கிளம்பினார். சென்னை பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்கு கமலஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது