ஆஸ்திரேலியா அமைச்சருடன் கமல்ஹாசன் முக்கிய ஆலோசனை: இதுதான் காரணம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் ஆஸ்திரேலிய அமைச்சருடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ள புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அவர் எதற்காக ஆஸ்திரேலிய அமைச்சரை சந்தித்தார் என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து உள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலியாவில் இந்த படம் மிகப்பெரிய சாதனை செய்து உள்ளது என்பதும் ரஜினியின் ‘2.0’ படத்தை அடுத்து ஆஸ்திரேலியாவில் அதிக வசூல் செய்த தமிழ் படம் ’விக்ரம்’ தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கமல்ஹாசனின் அடுத்த படத்தை பிரபல மலையாள இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ள நிலையில் இந்த படத்தின் சில பகுதி படப்பிடிப்பு ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பு நடத்த அனுமதி பெற ஆஸ்திரேலியா அமைச்சரை கமல் சந்தித்ததாகவும் கமலஹாசனுக்கு ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஆஸ்திரேலியாவில் தனது KH நிறுவனத்தின் கதர் தயாரிப்பு ஆடைகளை விற்பனை செய்வது குறித்தும் அவர் ஆஸ்திரேலிய அமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
கமலஹாசன் ஆஸ்திரேலிய அமைச்சர்களை சந்தித்தப் புகைப்படம் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com