கமல் போட்டியிட போகும் தொகுதி எது?
- IndiaGlitz, [Tuesday,February 23 2021]
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் வரும் தேர்தலில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்று ஏற்கனவே கூறியிருந்த நிலையில் அவர் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பது குறித்த தகவல்கள் தற்போது கசிந்துள்ளது
மக்கள் நீதி மய்யம் கட்சியின் வட்டாரங்களில் இதுகுறித்து விசாரித்தபோது கமல்ஹாசன் நான்கு தொகுதிகளை தேர்வு செய்து வைத்திருப்பதாகவும் இந்த நான்கு தொகுதிகளில் ஒன்று அல்லது இரண்டு தொகுதிகளில் அவர் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தனர்.
மயிலாப்பூர், ஆலந்தூர், தி.நகர் மற்றும் வேளச்சேரி ஆகிய 4 தொகுதிகளில் ஒன்றில் கமல்ஹாசன் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பாக ஆலந்தூர் தொகுதியில் அவர் போட்டியிட அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது
இதற்கு முன்னர் ஆலந்தூர் தொகுதி பரங்கிமலை என்ற தொகுதியாக இருந்த போது எம்ஜிஆர் அந்த தொகுதியில் திமுக வேட்பாளராக 1967 மற்றும் 1971 ஆகிய இரண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பதும் அதனை கணக்கில் கொண்டு அந்த தொகுதியில் கமலஹாசன் போட்டியிடலாம் என்றும் கூறப்படுகிறது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி பெருவாரியான ஓட்டுகளை பெற்றுள்ளது என்பதும் இந்த தொகுதியை கமல் தேர்வு செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.