'மருதநாயகத்திற்கு வழிகாட்டுகிறதா பாகுபலி?
- IndiaGlitz, [Monday,July 20 2015]
இந்தியாவின் மாபெரும் பட்ஜெட் படமான 'பாகுபலி' திரைப்படம் இரண்டாவது வாரமாக வெற்றிகரமாக நல்ல வசூலுடன் ஓடிக்கொண்டிருக்கின்றது. ரூ.250 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம், முதலீட்டு பணத்தை ஒரே வாரத்தில் வசூல் செய்ததோடு ரூ.300 கோடி வசூல் இலக்கை நோக்கி கம்பீரமாக சென்று கொண்டிருக்கின்றது.
பாகுபலிக்கு பின்னர் ரிலீஸான சல்மான்கானின் 'பஜ்ரங்கி பைஜான்' மற்றும் தனுஷின் 'மாரி' ஆகிய படங்களால், பாகுபலி'க்கு வரும் கூட்டம் குறையவில்லை என்றே பாக்ஸ் ஆபீஸ் செய்திகள் கூறுகின்றன.
மேலும் இந்த படத்தின் வெற்றி மற்றும் அபாரமான வசூல் ஆகியவை கோலிவுட் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களை நிறைய யோசிக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது. பாகுபலிக்கு முன்னர் பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்க யோசித்த நிறுவனங்கள் கூட, இந்த படத்தின் வெற்றியை பார்த்து தைரியம் அடைந்துள்ளதாகவும், இனி பெரிய பட்ஜெட் படங்கள் அதிகம் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது..
குறிப்பாக கமல்ஹாசனின் கனவுப்படமான 'மருதநாயகம்', இடையில் நிறுத்தப்பட்டதற்கு காரணம், அந்த படத்தின் பெரியபட்ஜெட்தான். ஆனால் பாகுபலி கொடுத்த தைரியத்தின் காரணமாக, இந்த படம் மீண்டும் விரைவில் தொடங்கப்படும் என கூறப்படுகிறது.பிரமாண்டம், பெரிய பட்ஜெட் ஆகியவற்றுடன் உலகநாயகனின் அற்புதமான நடிப்பும் இணைந்தால், அந்த படம் மாபெரும் வெற்றி பெறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றே கோலிவுட்டில் கூறப்படுகிறது.