கமல் - மணிரத்னம் இணையும் 'தக்லைஃப்' படப்பிடிப்பு எப்போது? எங்கே?

  • IndiaGlitz, [Monday,January 01 2024]

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘தக்லைஃப்’ திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது என்பதும் அதனை தொடர்ந்து இந்த படத்தின் புரமோஷன் வீடியோவும் வெளியாகி இணையத்தில் வைரலானது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதி குறித்த தகவல் கசிந்து உள்ளது. கமல் - மணிரத்னம் இணையும் ‘தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் சென்னையில் நடைபெற இருப்பதாகவும் இதற்கான செட் அமைக்கும் பணி முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

பிக் பாஸ் இறுதிப் போட்டி முடிந்தவுடன் ‘தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பிற்கு கமல்ஹாசன் தயாராகி விடுவார் என்றும் அதனை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கமல் ஜோடியாக த்ரிஷா நடிக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடிக்கவுள்ளனர். இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ரவி கே சந்திரன் ஒளிப்பதிவும், ஸ்ரீதர் பிரசாத் படத்தொகுப்பு பணியும் செய்ய உள்ளனர்.

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்க உள்ளது. ‘நாயகன்’ கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

More News

தினேஷ் உடன் குத்துச்சண்டை.. தோல்வி அடைபவர் நாமினேஷன்.. செம்ம ட்விஸ்ட் அளித்த பிக்பாஸ்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெறும் என்பதும் இதில் சிக்குபவர்களில் குறைந்த வாக்குகள் பெற்ற ஒருவர் அந்த வாரத்தில் இறுதியில் வெளியேற்றப்படுவார் என்பதும்

நடிகை  ரகுல் ப்ரீத் சிங்கிற்கு திருமணம்.. மாப்பிள்ளை பிரபல தயாரிப்பாளர்.. திருமண தேதி இதுதான்..!

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ரகுல் பிரீத் சிங் பிரபல தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

புத்தாண்டில் ஒரு சர்ப்ரைஸ்.. 'GOAT' படத்தின் சூப்பர் அப்டேட்டை தெரிவித்த வெங்கட் பிரபு..!

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'GOAT' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது என்பதும் இந்த போஸ்டர் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானது

'மழை பிடிக்காத மனிதன்' படத்தில் விஜயகாந்துக்கு பதில் யார்? விஜய் மில்டன் கூறுவது என்ன?

இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் தற்போது 'மழை பிடிக்காத மனிதன்' என்ற படத்தை இயக்கி வரும் நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் விஜயகாந்தை நடிக்க வைக்க அவர் திட்டமிட்டு

விஜய் ஒன்றும் அஜித்தோ, மகேஷ்பாபுவோ அல்ல.. ரசிகரின் கருத்துக்கு பதிலடி கொடுத்த வெங்கட் பிரபு..!

விஜய் ஒன்றும் அஜித்தோ, அல்லது மகேஷ்பாபுவோ என்றும் ஹாலிவுட் ரீமேக் படத்திற்கு அவர் செட்டாக மாட்டார் என்றும் அவருக்கேற்ற தெலுங்கு ரீமேக் படத்தை எடுக்கவும் என்றும் இயக்குனர் வெங்கட்