அல்போன்சாவுக்கு பங்கனப்பள்ளி மாம்பழம் கொடுத்த கமல்ஹாசன்.. சித்தார்த் அடித்த கமெண்ட்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல ஹாலிவுட் இயக்குனர் அல்போன்சா என்பவரை உலகநாயகன் கமல்ஹாசன் சந்தித்தபோது அவருக்கு மாம்பழம் பரிசளித்ததாகவும் அப்போது அருகில் இருந்த நடிகர் சித்தார்த், அல்போன்சாவுக்கு பங்கனபள்ளி மாம்பழம் பரிசாக கிடைத்துள்ளது என்று கமெண்ட் அடித்ததாகவும் கமல்ஹாசன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
வார்னர் பிரதர்ஸ், 20த் செஞ்சுரி, யுனிவர்சல் பிக்சர்ஸ் உள்ளிட்ட பிரபல நிறுவனங்கள் தயாரித்த படங்களை இயக்கியவர் பிரபல ஹாலிவுட் இயக்குனர் அல்போன்சா கிரான். இவர் சென்னை வந்திருந்த அவரை உலகநாயகன் கமல்ஹாசன் சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்களை கமல்ஹாசன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
மேலும் இந்த சந்திப்பின்போது இயக்குனர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் ஆகியோர்களும் உடன் இருந்தனர். மேலும் ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன், மகேந்திரன், நாராயணன், சித்தார்த் மற்றும் அவரது மனைவி அதிதி மற்றும் அமிர்தா ஆகியோர்கள் இருந்ததாக கமல்ஹாசன் பகிர்ந்து கொள்ள புகைப்படங்களில் இருந்து தெரிய வருகிறது.
இந்த சந்திப்பு குறித்து கமல்ஹாசன் கூறிய போது ’எனது சினிமா துறையில் இருக்கும் ஒரு பிரபல இயக்குனரை இன்று சந்தித்தேன், நாங்கள் சினிமா சினிமா சினிமா மட்டுமே பல மணி நேரம் பேசினோம். நான் மதிய உணவின் போது நம்மூர் சீசன் மாம்பழங்களை அவருக்கு அளித்தேன். அப்போது அங்கு இருந்த நடிகர் சித்தார்த், ‘அல்போன்சாவுக்கு பங்கனபள்ளி மாம்பழம் கிடைத்திருக்கிறது என்று கிண்டல் செய்ததாகவும் கமல்ஹாசன் அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com