தேர்தல் முடிந்த சில நிமிடங்களில் வெளியான அறிவிப்பு.. கமல் கட்சியில் இருந்து விலகிய பிரமுகர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் தேர்தல் முடிந்து ஒரு சில நிமிடங்களில் கமல் கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகி வெளியேறி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி திமுக கூட்டணியில் இருந்தபோதிலும் அந்த கட்சி எந்த தொகுதியிலும் போட்டியிடவில்லை என்பது தெரிந்தது. இருப்பினும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிக்காக கமல்ஹாசன் கடந்த சில நாட்கள் ஆக பிரச்சாரம் செய்தார்.
இந்த நிலையில் இன்று தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்த ஒரு சில நிமிடங்களில் கமல் கட்சியின் மாணவர் அணி தலைவராக இருந்த சங்கர் ரவி என்பவர் தனது பதவியை ராஜினாமா செய்வதோடு மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கட்சியின் பதவி மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் முதன்மை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன். கட்சியில் பல பிரச்சனைகள் எனக்கு எதிராக தொடர்ந்து நடந்து வருகின்றன. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்த பிறகு கட்சியை விட்டு விலகுவது என்று சில வாரங்களுக்கு முன்பே முடிவு செய்தேன். சில சம்பவங்கள் எனக்கு மிகவும் ஏமாற்றத்தை அளித்தன, குறிப்பாக எனது வேலை மற்றும் செயல்பாடுகளை நிறுத்துவதற்கான அழுத்தம் இருந்ததாக நான் உணர்ந்தேன்.
எனக்கு இது ஒன்றும் புதிதல்ல என்றாலும், கட்சித் தலைமையின் மீது எனக்கு அதிக நம்பிக்கை இருந்தது, வெளிப்படையாக எனக்கு என்ன நடந்தாலும் அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு கட்சிக்காக தொடர்ந்து பணியாற்றினேன், ஆனால் இப்போது நான் சலிப்படைந்துவிட்டேன். அதனால் இப்போது உறுதியான முடிவை எடுப்பது நல்லது என நினைக்கிறேன்.
நான் நீண்ட காலமாக கட்சியில் சில பிரச்சினைகளை எதிர்கொள்கிறேன், யாருடைய பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை. கடைசி நாள் வரை கட்சிக்காக உழைத்தேன். எப்படியிருந்தாலும், கடந்த 3 ஆண்டுகளாக கட்சிக்காக ஒவ்வொரு மாதமும் குறைந்தது ஒரு நிகழ்வையாவது செய்து வருகிறேன், அது சமூக ஊடகங்களிலும் ஊடகங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடைசி நாள் வரை கட்சிக்காக உழைத்தேன். எதிர்காலத்தில் மக்கள் நீதி மய்யம் இளைஞர்களையோ அல்லது கட்சிக்காக உழைத்தவர்களையோ புறக்கணிக்காது என நம்புகிறேன். எனது தனிப்பட்ட கருத்து என்னவெனில் மக்கள் நீதி மய்யம் சிறப்பாக அமைய வேண்டும், அதற்கு எனது வாழ்த்துக்கள்’ என்று கூறியுள்ளார்.
Goodbye @maiamofficial .
— Shankar Ravi (@ShankarRavi369) April 19, 2024
I’m resigning from my primary membership and my position after a certain consistent flow of events and internal politics that happened to me, I had Pre-decided to resign few weeks ago itself but wanted to make it official after the parliamentary elections… pic.twitter.com/26PQrBYon0
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments