கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் தோல்வி: வாக்கு வித்தியாசம் இவ்வளவுதானா?

  • IndiaGlitz, [Monday,May 03 2021]

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் உலகநாயகன் நடிகருமான கமலஹாசன் கோவை தெற்கு தொகுதியில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த தொகுதியில் அவர் சுமார் 1,700 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார்

இந்த தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள் 53 ஆயிரத்து 209 வாக்குகள் பெற்ற நிலையில் கமல்ஹாசன் 50 ஆயிரத்து 481 வாக்குகள் பெற்றார். இதனை அடுத்து 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் கமல்ஹாசன் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மிகக்குறைந்த வித்தியாசத்தில் கமல் தோல்வி அடைந்துள்ளது அவரது கட்சியினர், ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

இந்த நிலையில் தேர்தல் தோல்வி குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கூறியதாவது: மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். வாக்களித்த மக்களுக்கும், தேர்தல் களத்தில் தோள் கொடுத்த மநீம உறுப்பினர்களுக்கும், கூட்டணிக் கட்சியினருக்கும் மனமார்ந்த நன்றிகள். 'சீரமைப்போம் தமிழகத்தை' என்பது ஒரு தேர்தலுக்கான கோஷம் அல்ல. அது மக்கள் நீதி மய்யத்தின் கனவு. மண், மொழி, மக்கள் காக்க தொடர்ந்து களத்தில் நிற்போம்.