ரஜினிக்கு விமானம், கமலுக்கு ரயில்: வேற லெவலில் 'விக்ரம்' புரமோஷன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’கபாலி’ திரைப்படத்திற்கு விமானத்தில் புரமோஷன் செய்யப்பட்ட நிலையில் உலக நாயகன் கமல்ஹாசனின் ’விக்ரம்’ படத்திற்கு ரயிலில் புரமோஷன் செய்யப்பட்ட தகவல் வெளிவந்துள்ளது.
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ’விக்ரம்’. இந்த படத்தில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராமன், ஷிவானி நாராயணன், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியாக கமல்ஹாசன் நடித்து உள்ளதாகவும் வில்லனாக விஜய் சேதுபதி மிரட்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த படம் வரும் ஜூன் மூன்றாம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது புரமோஷன் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக ரயில்களில் விக்ரம் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
#Vikram Train ??
— Kannan (@TFU_Kannan) April 19, 2022
Promos in full swing...@ikamalhaasan @Dir_Lokesh @VijaySethuOffl @anirudhofficialpic.twitter.com/3siowTyO9J
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments