'விக்ரம்' படத்தின் 8 நாள் வசூல் இத்தனை கோடியா? ஆச்சரியத்தில் கோலிவுட்

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்’ திரைப்படம் கடந்த மூன்றாம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியான நிலையில் இந்த படம் ரிலீசாகி நேற்றுடன் எட்டு நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இந்த படத்தின் 8 நாள் வசூல் குறித்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் வெளியாகிய இந்த படம் ரிலீஸான முதல் நாளே உலகம் முழுவதும் 40 கோடி ரூபாய் வசூல் ஆனது என்றும் 3 நாட்களில் 100 கோடி ரூபாய் ரிலீஸ் ஆனது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் வெளியாகி நேற்றுடன் எட்டு நாட்கள் முடிவடைந்த நிலையில் ரூ.270 கோடி உலகம் முழுவதும் வசூல் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த படம் இந்தியாவில் மட்டும் 200 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் வசூல் இன்னும் திருப்திகரமாக இருப்பதால் வரும் நாட்களில் அதிகமாக வசூல் செய்யும் என்றும் ரூ.500 கோடியை இந்தப் படத்தின் மொத்த வசூல் நெருங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றும் டிரேடிங் வட்டாரங்கள் கூறுகின்றன.