இனி கமல் படங்களில் ஏஐ டெக்னாலஜியை பார்க்கலாம்... அமெரிக்கா சென்று படிக்கும் உலக நாயகன்..!
- IndiaGlitz, [Sunday,September 08 2024]
உலகநாயகன் கமல்ஹாசன் ஏஐ டெக்னாலஜி குறித்து படிப்பதற்காக அமெரிக்கா சென்று உள்ளதாகவும் அவர் 90 நாட்கள் அங்கு தங்கியிருந்து படிப்பார் என்றும் கூறப்படுகிறது.
உலக சினிமாவில் எந்த ஒரு புதிய டெக்னாலஜி வந்தாலும் அதை கமல்ஹாசன் தான் தமிழ் திரையுலகில் அறிமுகப்படுத்துவார் என்று கூறப்படும் நிலையில் தற்போது சினிமா உட்பட அனைத்து துறைகளிலும் ஏஐ என்ற செயற்கை நுண்ணறிவு டெக்னாலஜி புகுந்து விட்டது.
இந்த நிலையில் இந்த ஏஐ டெக்னாலஜியை முறைப்படி படிப்பதற்காக உலகநாயகன் கமல்ஹாசன் அமெரிக்கா சென்று இருப்பதாகவும் அங்கு அவர் சில மாதங்கள் தங்கி இருந்து இந்த டெக்னாலஜியை முழுமையாக படித்துவிட்டு சென்னை திரும்புவார் என்றும் கூறப்படுகிறது. கமல்ஹாசன் ஏஐ டெக்னாலஜியை படித்து முடித்துவிட்டால் அவருடைய அடுத்தடுத்த படங்களில் இந்த டெக்னாலஜி பயன்படுத்தப்படும் என தெரிகிறது.
கமல்ஹாசன் நடிப்பில் உருவான ’இந்தியன் 2’ மற்றும் ’கல்கி 2898 ஏடி’ ஆகிய இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியான நிலையில் தற்போது அவர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’தக்லைஃப்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு அவர் ’இந்தியன் 3’ ’கல்கி 2898 ஏடி’ இரண்டாம் பாகம் மற்றும் அன்பறிவ் இயக்கத்தில் உருவாகும் படம் ஆகியவற்றிலும் நடக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.