தமிழ் மக்களுக்கு நம்பிக்கை துரோகம்: விழித்தெழு என்று கூறிய கமல்ஹாசன்
- IndiaGlitz, [Saturday,March 03 2018]
நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் மதுரையில் 'மக்கள் நீதி மய்யம்' என்ற கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்குவதற்கு முன்பே அவர் தமிழக அரசு பல துறைகளில் செயலற்று இருப்பதை தனது டுவிட்டரில் சுட்டிக்காட்டி வந்தார். இந்த நிலையில் மேலும் ஒரு தமிழக அரசின் துறை செயலற்று இருப்பது குறித்து தெரிவித்துள்ளார். அந்த துறை தான் மாசுக்கட்டுப்பாடு துறை. இதுகுறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கூறியதாவது:
மேலும் ஒரு அரசுத்துறை செயலற்று இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. காவிரிப் படுகையில் மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் செயல்கள் அதிர்ச்சி அளிக்கிறது . தமிழ் மக்களின் நம்பிக்கைக்குத் துரோகம் இழைக்கிறது வாரியம் . மாசுக்கட்டுப்பாடு வாரியமே விழித்தெழு
சமீபத்தில் சென்னையில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் ஓ.என்.ஜி.சி எண்ணெய் குழாய் பாதிப்புகளில் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியமே குற்றவாளி என்றும், காவிரி படுகையில் செயல்படும் ஒ.என்.ஜி.சி நிறுவனத்தை தமிழக மாசுக்கட்டுபபாடு கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும், ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன் கூறியிருந்தார். இதே கருத்தை இன்று கமல் அவர்களும் சுட்டிக்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஒரு அரசுத்துறை செயலற்று இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. காவிரிப் படுகையில் மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் செயல்கள் அதிர்ச்சி அளிக்கிறது . தமிழ் மக்களின் நம்பிக்கைக்குத் துரோகம் இழைக்கிறது வாரியம் . மாசுக்கட்டுப்பாடு வாரியமே விழித்தெழு
— Kamal Haasan (@ikamalhaasan) March 3, 2018