கொள்ளை அடிப்பவரை தாக்க தயார். டுவிட்டரில் கமல் ஆவேசம்
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் கமல்ஹாசன் அவ்வப்போது டுவிட்டரில் சமூக அக்கறையுடன் ஆவேசமான கருத்துக்களை கூறி வருகிறார். அவரது கருத்து பெரும்பாலும் ஆளும் அரசின் ஊழல்களை குறித்தே இருப்பதால் பொதுமக்களால் வரவேற்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது அவர் பதிவு செய்துள்ள டுவீட்டில் சற்று ஆவேசம் அதிகமாகியுள்ளது. கோவில்களை கொள்ளையடிப்பவரை தாக்க தயார் என்று கூறும் அளவிற்கு கோவில்களில் கடவுள் பெயரை சொல்லி ஊழல் நடப்பதை அவர் குறிப்பிட்டுள்ளார்.
கமல்ஹாசன் தனது டுவீட்டில், 'கோவிலைக் கொள்ளை அடிப்பவரை தாக்க நான் தயார். நான் தொழுபவனா இல்லையா என்பதல்ல கேள்வி. நம்பினார் கைவிடப்பட்டது, உமை ஆள்பவர் செயல், நீர் நம்பும் ஆண்டவன் செயலல்ல. பக்தர்களில் பல்வகையுண்டு. அனைவரும் என் கேளிர். ஆனால் சாதி அதைச் சகியாது. நாமும் அதைச் சகிக்கலாகாது' என்று கூறியுள்ளார்
நான் கடவுளை வணங்குகிறேனா? இல்லையா? என்பது கேள்வி அல்ல என்றும், ஆத்திகன், நாத்திகன் யாராக இருந்தாலும் கோவில் கொள்ளையை எதிர்த்து கேட்க உரிமை உண்டு என்றும் இனியும் இதை கண்டு சகிக்க இயலாது என்றும் அவர் ஆவேசமாக கூறியுள்ளார். டுவிட்டரில் காட்டும் ஆவேசத்தை அவர் விரைவில் செயலிலும் காட்டுவார் என்று எதிர்பார்ப்போம்
கோவிலைக் கொள்ளை அடிப்பவரை தாக்க நான் தயார். நான் தொழுபவனா இல்லையா என்பதல்ல கேள்வி. நம்பினார் கைவிடப்பட்டது, உமை ஆள்பவர் செயல், நீர் நம்பும் ஆண்டவன் செயலல்ல. பக்தர்களில் பல்வகையுண்டு.
— Kamal Haasan (@ikamalhaasan) November 29, 2017
அனைவரும் என் கேளிர். ஆனால் சாதி அதைச் சகியாது.
நாமும் அதைச் சகிக்கலாகாது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com