கமல்ஹாசன் இறங்கி அடிச்ச குத்துபாட்டு: ரிலீஸ் தேதியை அறிவித்த அனிருத்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கமலஹாசன் ஒரு சிறந்த பாடகர் என்பதும் 'அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ’ உள்பட ஒருசில குத்துப்பாடல்களையும் அவர் பாடியுள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ’விக்ரம்’ திரைப்படத்தில் கமல்ஹாசன் ஒரு பாடலை பாடி இருப்பதாக ஏற்கனவே இசையமைப்பாளர் அனிருத் அறிவித்திருந்த நிலையில் ’இந்த பாடல் கமல்ஹாசன் இறங்கி அடிச்ச ஒரு குத்துபாடல்' என்றும் நீண்ட இடைவேளைக்கு பிறகு ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் ’பத்தல பத்தல’ என்ற பாடல் இன்று வெளியாக இருப்பதாக அனிருத் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். கமல்ஹாசனே எழுதி பாடிய இந்த பாடல் உலகம் முழுவதும் அவரது ரசிகர்களால் மிகப் பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் ஜூன் மூன்றாம் தேதி வெளியாக இருக்கும் ’விக்ரம்’ திரைப் படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் வரும் 15ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிய இந்த படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான ‘விஸ்வரூபம் 2’ படத்திற்கு பின் 4 வருட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் கமலஹாசன் படம் என்பதால் அவரது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், ஷிவானி நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட உள்ளது என்பது தெரிந்ததே.
#PathalaPathala Ulaganayagan @ikamalhaasan sir in yerangi kuthu mode after a long time ???????? #VikramFirstSingle from today ??????@Dir_Lokesh ?????? @RKFI
— Anirudh Ravichander (@anirudhofficial) May 11, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com