மீண்டும் ஒரு குறும்படம்.. ஜனனி, அசீம் ஷாக்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே தனலட்சுமி விவகாரம் குறித்து ஒரு குறும்படம் போடப்பட்ட நிலையில் தற்போது இன்று இன்னொரு குறும்படம் ஒளிபரப்பாக உள்ளது என இன்றைய புரமோவில் கமல்ஹாசனின் பேச்சில் இருந்து தெரியவருகிறது.

இந்த வாரம் நடந்த சொர்க்கம் நரகம் டாஸ்க்கில் ஜனனி மற்றும் விக்ரமன் ஆகிய இருவரும் நரகத்திலிருந்து சொர்க்கத்துக்கு வர முயற்சிக்கின்றனர். அப்போது அவர்கள் இருவரையும் தனலட்சுமி தடுக்கும் முயற்சியில் உள்ளார்

இந்த நிலையில் சொர்க்கத்துக்கு வருவதற்கு யார் முதலில் கோட்டை தொட்டார்கள் என்பதில் ஜனனி மற்றும் விக்ரமன் ஆகிய இருவருக்கும் இடையே சர்ச்சை ஏற்படுகிறது. விக்ரமன் நான் தான் முதலில் கோட்டை தொட்டேன் என்று கூற அதை மறுக்கும் ஜனனி நான் தான் முதலில் தொட்டேன் என்று கூறுகிறார்

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் தலையிடும் அசீம், ‘ஜனனி தான் முதலில் கோட்டை தொட்டார் என்றும் அதனை நான் பார்த்தேன் என்றும் கூறுகிறார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று கமல்ஹாசன் முன் இந்த விவகாரம் விசாரணைக்கு வந்தது.

அப்போது அப்போது கமல்ஹாசன், ‘நான் பார்த்த ஒரு விஷயத்தை இப்போது சொல்லப் போகிறேன். எல்லோரும் ஜனனி தான் முதலில் கோட்டை தொட்டார் என்றும், அசீம் கண்ணால் பார்த்ததாக சொன்னார் என்று கூறி குறும்படம் போடுகிறார். இந்த குறும்படத்தை பார்க்கும்போது, ஜனனி தொட்டாரா? இல்லையா? என்பதை அசீம் பார்க்க வாய்ப்பில்லை என்றும் கூறுகிறார். இந்த குறும்படத்தால் அசீம் மற்றும் ஜனனி ஆகிய இருவரும் ஷாக் ஆகி உள்ளது போல் தெரிகிறது.
 

More News

'சூர்யா 42' படத்தில் இணைந்த பிரபலம்.. வேற லெவலில் ஸ்டண்ட் காட்சிகள்!

 மலையாள திரையுலகின் முன்னணி சண்டை இயக்குனர் சூர்யா நடித்து வரும் 'சூர்யா 42' படத்தில் இணைந்து உள்ளதாகவும் இதனால் இந்த படத்தின் ஆக்ஷன் காட்சிகள் வேற லெவலில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

குஷ்புவின் வீட்டில் நிகழ்ந்த சோகம்.. திரையுலகினர் இரங்கல்!

நடிகை குஷ்புவின் வீட்டில் நிகழ்ந்த சோகத்தை அடுத்து திரையுலகினர் ரசிகர்கள் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறி வருகின்றனர். 

'அவதார் 2' படம் பார்த்த ரசிகர் திடீர் மரணம்.. என்ன காரணம்?

சமீபத்தில் வெளியான 'அவதார் 2' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த படத்தை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர் ஒருவர் திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம்

பாலிவுட் திரைப்படங்களின் தோல்விக்கு இந்த ஒரு காரணம் தான்.. எஸ்.எஸ்.ராஜமெளலி

கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் திரைப்படங்கள் தொடர்ச்சியாக தோல்வியடைந்து கொண்டிருப்பதற்கு இந்த ஒரு காரணம் தான் என பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி தெரிவித்துள்ளார். 

சீட்டாட்டம் விழிப்புணர்வு குறித்து படமே எடுத்தேன்: ஆன்லைன் ரம்மி குறித்து பிரபல நடிகர்!

சீட்டு விளையாட்டினால் ஏற்படும் தீமை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு திரைப்படமே எடுத்தேன் என தமிழ் நடிகர் ராஜ்கிரன் அவர்கள் கூறியுள்ளார்.