'லியோ'வில் இணைந்த கமல்ஹாசன்.. கமாண்டர் கர்ணன் எல்.சி.யூ காட்சிகளா?

  • IndiaGlitz, [Friday,September 29 2023]

தளபதி விஜய் நடித்துள்ள ’லியோ’ திரைப்படம் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பாக நேற்று இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியானவுடன் இந்த படத்திற்கு உச்சபட்ச எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஏற்கனவே 'லியோ’ திரைப்படத்தில் அர்ஜுன், சஞ்சய்தத் உட்பட ஒரு மிகப்பெரிய நட்சத்திர கூட்டம் நடித்துள்ள நிலையில் கமல்ஹாசன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. கமல்ஹாசன் சமீபத்தில் ’லியோ’ படத்திற்காக டப்பிங் செய்ததாகவும் இந்த டப்பிங் செய்யப்பட்டபோது விஜய்யும் அருகில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

’விக்ரம்’ திரைப்படத்தில் விக்ரம் மற்றும் கமாண்டர் கர்ணன் கேரக்டரில் நடித்திருந்த கமல்ஹாசன் எல்சியு காட்சிகள் ’லியோ’ படத்தில் இணைக்கப்பட்டுள்ளதா? அல்லது ’பொன்னியின் செல்வன்’ படம் போல் கதை சுருக்கத்தை முன்னோட்டமாக அவர் படம் ஆரம்பிக்கும் போது பேசி உள்ளாரா? என்பதை படம் வெளியாகும் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மொத்தத்தில் கமல்ஹாசன் இந்த படத்தில் இணைந்துள்ளதாக வெளியான செய்திகள் இந்த படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதில் மட்டும் சந்தேகம் இல்லை.

More News

சென்சார் சான்றிதழ் வாங்க லட்சக்கணக்கில் லஞ்சம்.. விஷால் கூறிய அதிர்ச்சி தகவல்..!

நடிகர் விஷால் நடித்த 'மார்க் ஆண்டனி' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் வசூலிலும் சாதனை செய்து வருகிறது என்பதும் தெரிந்ததே.

'சித்தா' பிரஸ் மீட்டில் இருந்து திடீரென வெளியேறிய சித்தார்த்.. அதிர்ச்சி வீடியோ வைரல்..!

நடிகர் சித்தார்த் நடித்த 'சித்தா' என்ற திரைப்படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் திடீரென அவர் பிரஸ்மீட்டிலிருந்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

வத்திக்குச்சியில எரிமலை மவனே.. நெருங்காதே நீ..  'லியோ' செகண்ட் சிங்கிள் பாடல்..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற 'நா ரெடி' என்ற சிங்கிள் பாடல் ஏற்கனவே வெளியாகி உலகம் முழுவதும் ஹிட் ஆகியது.

மீண்டும் வில்லனாகிறாரா பார்த்திபன்? மாஸ் நடிகர் படத்தில் ஒப்பந்தம் என தகவல்..!

விஜய் சேதுபதி, அர்ஜுன் உட்பட பல நடிகர்கள் தற்போது வில்லனாக நடித்து வருகின்றனர் என்பதும் அவர்கள் வில்லனாக நடித்த படங்கள் நல்ல  வரவேற்பை பெற்று வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம்.

'சுப்பிரமணியபுரம்' நடிகை கணவரை விவாகரத்து செய்கிறாரா? அவரே அளித்த பதில்..!

சசிகுமார் நடித்து இயக்கிய 'சுப்பிரமணியபுரம்' என்ற திரைப்படத்தில் நாயகி ஆக நடித்த நடிகை, தனது கணவரை விவாகரத்து செய்வது குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.