'புரொஜக்ட் கே' படத்தில் இணைந்த கமல்ஹாசன்.. வரவேற்ற அகில இந்திய திரை பிரபலம்..!

  • IndiaGlitz, [Sunday,June 25 2023]

பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’புரொஜக்ட் கே’ என்ற திரைப்படத்தில் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாகவும் அவர் இந்த படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியாகின.

மேலும் இந்த படத்தில் கமல்ஹாசன் இணைவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் இயக்குனர் நாக் அஸ்வின், கமல்ஹாசன் ’புரொஜக்ட் கே’ படத்தில் இணைவதை உறுதி செய்தார்,. மேலும் இது குறித்த வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கும் அகில இந்திய திரையுலக பிரபலம் அமிதாப்பச்சன், தனது சமூக வலைத்தளத்தில் கமல்ஹாசனை வரவேற்று உள்ளார். உங்களுடன் மீண்டும் பணி செய்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் இந்த படத்தின் நாயகன் பிரபாஸ், கமல்ஹாசன் குறித்து கூறியபோது, ‘என் இதயத்தில் என்றென்றும் பதிந்திருக்கும் தருணம். கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க போகிறேன் என்பதை தெரிவிக்க எனக்கு வார்த்தை கிடைக்கவில்லை. வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட மரியாதை அவர் மீது வைத்திருக்கின்றேன். ’புரொஜெக்ட் கே’ படத்தில் அவருடன் நடிக்க கிடைத்த வாய்ப்பு ஒரு கனவு நனவான தருணம்’ என்று தெரிவித்துள்ளார்.

More News

அண்ணி ஜோதிகாவின் வெறித்தனமான வொர்க்-அவுட் .. கார்த்தியின் கமெண்ட் என்ன தெரியுமா?

நடிகை ஜோதிகா கடந்த சில நாட்களுக்கு முன்னால் வெறித்தனமாக வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார் என்பதும் அந்த வீடியோவை பார்த்து பல திரை

தமிழ் சினிமாவில் பிரமாண்டத்தை அறிமுகம் செய்தவர்: கலைப்புலி எஸ் தாணுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

 தமிழ் சினிமாவில் தற்போது பல திரைப்படங்கள் பிரம்மாண்டமாக உருவாகி வந்தாலும் பிரம்மாண்டத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் கலைப்புலி எஸ் தாணு தான் என்பது அனைவரும் அறிந்ததே. 

குழந்தையோடு குழந்தையாக மாறிய செல்வராகவன்.. என்ன செய்றார் பாருங்க.. வைரல் வீடியோ..!

தமிழ் சினிமாவின் வித்தியாசமான இயக்குனர் செல்வராகவன் தனது மகனுடன் விளையாடும் வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் குழந்தையோடு குழந்தையாக விளையாடும் அந்த

அர்ஜுன் மகளை திருமணம் செய்கிறாரா குணசித்திர நடிகர் மகன்? குவியும் வாழ்த்துக்கள்..!

 ஆக்சன் கிங் அர்ஜுன் மகளை பிரபல குணசித்திர நடிகர் மகன் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று கமல்ஹாசனின் புதிய பட அறிவிப்பு வெளியாகிறதா? ஆர்வத்துடன் காத்திருக்கும் ரசிகர்கள்

உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது 'இந்தியன் 2' என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு கட்டத்தில் உள்ளது என்பது தெரிந்ததே. ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும்