close
Choose your channels

'புரொஜக்ட் கே' படத்தில் இணைந்த கமல்ஹாசன்.. வரவேற்ற அகில இந்திய திரை பிரபலம்..!

Sunday, June 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’புரொஜக்ட் கே’ என்ற திரைப்படத்தில் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாகவும் அவர் இந்த படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியாகின.

மேலும் இந்த படத்தில் கமல்ஹாசன் இணைவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் இயக்குனர் நாக் அஸ்வின், கமல்ஹாசன் ’புரொஜக்ட் கே’ படத்தில் இணைவதை உறுதி செய்தார்,. மேலும் இது குறித்த வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கும் அகில இந்திய திரையுலக பிரபலம் அமிதாப்பச்சன், தனது சமூக வலைத்தளத்தில் கமல்ஹாசனை வரவேற்று உள்ளார். உங்களுடன் மீண்டும் பணி செய்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் இந்த படத்தின் நாயகன் பிரபாஸ், கமல்ஹாசன் குறித்து கூறியபோது, ‘என் இதயத்தில் என்றென்றும் பதிந்திருக்கும் தருணம். கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க போகிறேன் என்பதை தெரிவிக்க எனக்கு வார்த்தை கிடைக்கவில்லை. வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட மரியாதை அவர் மீது வைத்திருக்கின்றேன். ’புரொஜெக்ட் கே’ படத்தில் அவருடன் நடிக்க கிடைத்த வாய்ப்பு ஒரு கனவு நனவான தருணம்’ என்று தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment