close
Choose your channels

பாஜகவின் ஸ்லீப்பர்செல் கமல்ஹாசன்: பிரபல எழுத்தாளர் குற்றச்சாட்டு

Wednesday, June 13, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளிவரவுள்ள திரைப்படம் 'விஸ்வரூபம் 2'. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இந்த படத்தின் டிரைலர் இருப்பதாக பலரும் பாராட்டி வரும் நிலையில் வழக்கம்போல் சர்ச்சையும் ஆரம்பமாகிவிட்டது. இந்த படத்திலும் முஸ்லீம்களுக்கு எதிரான கருத்துக்கள் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் ஒருசிலர் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல எழுத்தாளர் சாருநிவேதா, கமல்ஹாசன் படங்கள் குறித்து கருத்து கூறியபோது, 'ஹேராம்', 'உன்னைப்போல் ஒருவன்' என ஆரம்பத்திலிருந்தே கமல்ஹாசன் படங்களில் முஸ்லீம்களுக்கு எதிரான கருத்துக்கள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் பாரதிய ஜனாதா கட்சியின் ஸ்லீப்பர்செல் தான் கமல்ஹாசன்' என்றும் அவர் விமர்சனம் செய்துள்ளார்.

கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான எழுத்தாளர் சாருநிவேதா, கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தபின்னர் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். கமல்ஹாசன், பாஜகவின் கொபச என்றும் திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் செய்ய பாஜக கமல்ஹாசனை பயன்படுத்தி வருவதாகவும் சாருநிவேதா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment