ரஜினி போலவே நானும் அரசியலில் இருந்து விலகுகிறேனா: கமல்ஹாசன் பதில்!

உலக நாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், ஞாயிறு முதல் வியாழன் வரை தேர்தல் பிரச்சாரமும், வெள்ளி ஒருநாள் மட்டும் ஓய்வு எடுத்துவிட்டு பின்னர் சனிக்கிழமை பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார். இந்த நிலையில் இந்த வாரம் திருச்சி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரச்சாரம் செய்த கமல்ஹாசன் சற்றுமுன் சென்னை திரும்பினார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கமல் கூறியதாவது:

எங்களுக்கு மிகவும் நம்பிக்கை அளிக்கும் ஒரு பிரச்சாரம் ஆகவும், மக்கள் வெள்ளத்தில் மழையிலும் வெயிலிலும் நின்று கொண்டு அவர்கள் எங்களை வரவேற்றது எங்களுக்கு நம்பிக்கையை அளிக்கும் வகையில் வாழ்த்து சொன்னதும் மிகவும் சந்தோஷம் என்று கூறினார்.

மேலும் நடிகர் ரஜினிகாந்தை இன்று நீங்கள் சந்திக்க இருக்கின்றீர்களா? என செய்தியாளர்கள் கேட்டபோது ரஜினியிடம் கேட்டிருக்கின்றேன், அவரிடமிருந்து பதில் வந்ததும் சந்திப்பேன் என்றும், அவருடனான சந்திப்பு நட்புக்காக தான் என்பதும் அரசியல் சந்திப்பு கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் ’உதயநிதி அவர்கள் ரஜினிகாந்த் அரசியலை விட்டு விலகியது போல் கமல்ஹாசனும் விலகவேண்டும் என்று கூறியுள்ளாரே’ என்று கேட்டதற்கு பதிலளித்த கமலஹாசன் ’அது அவருடைய பிரார்த்தனை, அதன்படி நடக்க முடியும் என்பதை நான் சொல்ல முடியாது’ என்று கூறினார்.

More News

இந்த ஒரு காரணத்திற்காக ஆரிதான் இந்த வார பெஸ்ட் ஃபெர்மார்மர்: வைரல் வீடியோ

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் பெஸ்ட் ஃபெர்மார்மர் மற்றும் வொர்ஸ்ட் ஃபெர்மார்மர் தேர்வு செய்யப்படுவது வழக்கம்

ரஜினியின் அரசியல் முடிவு: அதிர்ச்சியில் உயிரிழந்த ரசிகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் தனது உடல்நிலை காரணமாக அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என்றும் அரசியலில் குதிக்க போவதில்லை என்றும் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தார்.

2020 இல் உலகை விட்டு பிரிந்த சில தமிழ் சினிமா பிரபலங்கள்…  

2020 இல் கொரோனா பரவல் மக்களை வாட்டி எடுத்ததோடு வேறு சில நிகழ்வுகளும் மக்களை வெகுவாகப் பாதிக்கச் செய்தன

மகளை இப்படியா அசிங்கப்படுத்துவது? ஷிவானி தாய்க்கு சின்மயி கண்டனம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களின் உறவினர்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் முதல் நபராக ஷிவானியின் அம்மா வந்தார் என்பதும், அவர் ஷிவானியை வறுத்தெடுத்தார் என்பது தெரிந்ததே 

திருச்சி டி.என்.பி.எல் தொழிற்சாலை 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கம்… முதல்வர் அறிவிப்பு!!!

திருச்சியில் உள்ள டி.என்.பி.எல் தொழிற்சாலை 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவுபடுத்தப்பட உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.