close
Choose your channels

காந்திஜி போல எனக்கும் இருவர். கமல்ஹாசன்

Wednesday, August 3, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வந்த 'சபாஷ் நாயுடு' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் முடிந்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கவிருந்த நிலையில் சில நாட்களுக்கு முன் திடீரென அவர் தனது ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து காயமடைந்தார்.
அவரது காலில் ஏற்பட்ட சிறிய எலும்புமுறிவுக்கு அறுவை சிகிச்சை செய்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவரது உடல்நிலை தேறி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறப்பட்டு வரும் நிலையில் இன்று கமல், தனது உடல்நிலை குறித்து சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை பதிவு செய்துள்ளார்.
'ரசிகர்களுடனும் நண்பர்களுடனும் பகிர ஓர் நற்செய்தி. இன்று எழுந்து நடந்தேன். காந்தியார் போல தோள் தாங்க இருவருடன்தான் என்றாலும் முன்னேற்றம்' என்று பதிவு செய்துள்ளார். கமல் விரைவில் பூரண குணமடைந்து 'சபாஷ் நாயுடு' படப்பிடிப்பை விரைவில் தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment