கமல்ஹாசனின் 'விக்ரம்' இத்தனை மொழிகளில் ரிலீஸா? அதிகாரபூர்வ அறிவிப்பு!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘விக்ரம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் இறுதிகட்ட போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியானது என்பது தெரிந்ததே.

இந்நிலையில் இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி மார்ச் 14-ஆம் தேதி காலை 7 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படம் ஐந்து மொழிகளில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் பான் - இந்தியா திரைப்படமாக கமல்ஹாசனின் ‘விக்ரம்’ வெளியாக உள்ளது. மேலும் இந்த படத்தின் ஐந்து மொழிகளின் போஸ்டர்களையும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளதை அடுத்து அந்த போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், ஷிவானி நாராயணன், காளிதாஸ் ஜெயராம், நரேன், அர்ஜூன் தாஸ், உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் அனிருத் இசையில் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவில் பிலோமினாராஜ் படத்தொகுபில் உருவாகியுள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது.