'விக்ரம்' ரிலீஸ் தேதியை அறிவித்த கமல்ஹாசன்: மாஸ் வீடியோ ரிலீஸ்
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமலஹாசன் நடித்து முடித்துள்ள ’விக்ரம்’ படத்தின் ரிலீஸ் தேதி இன்று காலை வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து கமல்ஹாசன் சற்று முன்னர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’விக்ரம்’ படத்தின் ரிலீஸ் தேதி ஜூன் 3 என அறிவித்துள்ளார்.
மேலும் 'நானும் உங்கள் முன் சமர்ப்பிக்க ஆவலாய் காத்திருக்கும் "விக்ரம்" உலகின் சிறந்த திரை அரங்குகளில் ஜூன் 3ஆம் தேதி முதல்’ என்று அவர் பதிவு செய்துள்ள கமல்ஹாசன், ’விக்ரம்’ படத்தின் மேக்கிங் கிளிம்ப்ஸ் வீடியோவையும் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ மாஸ் ஆக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உலகநாயகன் கமல்ஹாசனின் ’விக்ரம்’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், ஷிவானி நாராயணன், காளிதாஸ் ஜெயராம், நரேன், அர்ஜூன் தாஸ், உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் அனிருத் இசையில் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவில் பிலோமினாராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது.
I am waiting with bated breath for our "Vikram" to release world over, in theatres on June 3rd 2022.#VikramFromJune3
— Kamal Haasan (@ikamalhaasan) March 14, 2022
நானும் உங்கள் முன் சமர்ப்பிக்க ஆவலாய் காத்திருக்கும் "விக்ரம்" உலகின் சிறந்த திரை அரங்குகளில் ஜூன் 3ஆம் தேதி முதல்.https://t.co/1rDp6ro9yz
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments