ஒன்றியத்தின் தப்பாலே, சாவி இப்ப திருடன் கையில: கமல் குறிப்பிடுவது யாரை?

கமல்ஹாசன் நடிப்பில் அனிருத் இசையில் உருவான 'விக்ரம்’ திரைப்படத்தின் சிங்கிள் பாடலான ’பத்தல பத்தல’ சற்று முன் வெளியாகியுள்ள நிலையில் இந்த பாடலின் வரிகள் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை தாக்குவதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 
இந்த பாடலில் உள்ள ஒரு சில வரிகள் பின்வருவன:

கஜானாலே காசில்லே..
கல்லாலையும் காசில்லே..
காய்ச்சல் ஜூரம் நிறையா வருது தில்லாலங்கடி தில்லாலே..
ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பலே...
சாவி இப்ப திருடன் கையில தில்லாலங்கடி தில்லாலே..

மேற்கண்ட வரிகளில் உள்ள ’ஒன்றியத்தின் தப்பாலே’ என்ற வார்த்தைகளில் இருந்து கமல்ஹாசன் யாரை குறிப்பிடுகிறார் என்பது தெளிவாக புரிவதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். கமல்ஹாசன் எழுதி பாடியுள்ள இந்த பாடலில் மேலும் சில உள்ளர்த்தங்கள் இருப்பது கூர்ந்து கவனித்தால் தெரிகிறது என்ற கமெண்ட்ஸ்களும் பதிவாகி வருகிறது..

இருப்பினும் அனிருத்தின் இசையில் கமல்ஹாசன் குரலில் உருவாகிய இந்த குத்து பாடலை கேட்கும்போதே எழுந்து ஆட வேண்டும் போல் இருக்கிறது என கமல் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.