கமல்ஹாசனின் 'விக்ரம்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த 3ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான திரைப்படம் ‘விக்ரம்’. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ‘விக்ரம்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை ஹாட் ஸ்டார் நிறுவனம் பெற்றிருந்த நிலையில் தற்போது அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை அறிவித்து உள்ளது. ஹாட்ஸ்டார் ஓடிடியில் ‘விக்ரம்’ படம் ஜூலை 8ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு அதுகுறித்த வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
நாயகன் மீண்டும் வரார்.. ???? #Vikram Streaming from July 8 on #DisneyplusHotstar #VikramOnDisneyplusHotstar @ikamalhaasan @Dir_Lokesh @anirudhofficial @VijaySethuOffl #FahadhFaasil @Suriya_offl @Udhaystalin #Mahendran @RKFI @turmericmediaTM @SonyMusicSouth @RedGiantMovies_ pic.twitter.com/QUey20zavP
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) June 29, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com