'விக்ரம்' படத்தின் மொத்த திரையரங்க வசூல் எத்தனை கோடி? முழு விபரம் இதோ!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான ’விக்ரம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் 400 கோடிக்கும் அதிகமான திரையரங்குகளில் மட்டும் வசூல் ஆனது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது கிட்டத்தட்ட அனைத்து திரையரங்குகளிலும் ’விக்ரம்’ படம் தூக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் மொத்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

’விக்ரம்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் 432.50 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகவும் இதில் இந்தியாவில் மட்டும் 307.60 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக அளவில் மிக அதிகமாக வசூல் செய்த தமிழ் படம் என்ற பெருமையையும் ’விக்ரம்’ படம் பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஏரியா வாரியாக வசூல் நிலவரங்களை தற்போது பார்ப்போம்.


தமிழகம் - ரூ.181.80 கோடி
ஆந்திரா- தெலுங்கானா - ரூ.42.60 கோடி
கர்நாடகா - ரூ.25.40 கோடி
கேரளா - ரூ.40.50 கோடி
வட இந்தியா - ரூ.17.30 கோடி

இந்தியாவில் மொத்த வசூல் - ரூ.307.60 கோடி

வட அமெரிக்கா - $3.35 மில்லியன்
மத்திய கிழக்கு நாடுகள் - $5.20 மில்லியன்
மலேசியா - $2.35 மில்லியன்
சிங்கப்பூர்- $0.95 மில்லியன்
ஆஸ்திரேலியா-நியூசிலாந்து - $0.85 மில்லியன்
பிரிட்டன் - $1.05 மில்லியன்
பிரான்ஸ் - $0.50 மில்லியன்
ஐரோப்பிய நாடுகள் - $1 மில்லியன்
உலகின் மற்ற நாடுகள் - $0.75 மில்லியன்

வெளிநாட்டு மொத்த வசூல் - $16 மில்லியன் / ரூ.124.90 கோடி

ஒட்டுமொத்த வசூல் ரூ.432.50 கோடி