கமல்ஹாசனின் 'விக்ரம்': டிஜிட்டல், சாட்டிலைட் உரிமையின் அதிகாரபூர்வ அறிவிப்பு
- IndiaGlitz, [Wednesday,May 04 2022]
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விக்ரம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் வரும் ஜூன் மூன்றாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஒருபக்கம் விறுவிறுப்பாக இந்த படத்தின்ப் புரமோஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் வியாபாரமும் நடைபெற்று வருகிறது .
இந்நிலையில் ‘விக்ரம்’ படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை டிஸ்னி ஹாட்ஸ்டார் பெற்றுள்ளதாகவும் அதேபோல் இந்த படத்தின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மற்றும் கன்னடம் ஆகிய சாட்டிலைட் உரிமையை ஸ்டார் நிறுவனமும் மலையாள உரிமையை ஆசியாநெட் நிறுவனமும் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், ஷிவானி நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Yet another proud and landmark moment in our ever growing association.
— Turmeric Media (@turmericmediaTM) May 4, 2022
In cinemas worldwide on June 3rd #KamalHaasan #VikramFromJune3 @ikamalhaasan @Dir_Lokesh @anirudhofficial @RKFI @DisneyPlusHS @vijaytelevision @StarMaa @StarSuvarna @StarGoldIndia @asianet #Mahendran pic.twitter.com/1sJxIraCwb