close
Choose your channels

கமல்ஹாசனின் 'விக்ரம்' படம் குறித்த மாஸ் அப்டேட்!

Monday, November 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘விக்ரம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் மாஸ் அப்டேட் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது.

‘விக்ரம்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் 17ஆம் தேதி முதல் கோவையில் நடைபெற உள்ளதாகவும் இந்த படப்பிடிப்பில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகிய மூவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த மாஸ் அப்டேட் கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிந்துவிடும் என்றும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment