கமல்ஹாசனின் 'விக்ரம்' ஷூட்டிங் ஸ்பாட் மாஸ் புகைப்படம்!

ஒருபக்கம் பிக் பாஸ் மற்றும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது, இன்னொருபக்கம் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வது, மற்றொரு பக்கம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் பணிகளை கவனித்து வருவது என கமல்ஹாசன் இருபத்தி நான்கு மணி நேரமும் பிஸியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பில் கமலஹாசன் பிஸியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில் ஒன்று சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகிய இருவரும் இருக்கும் இந்த பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படம் தற்போது இணையதளங்களில் ஸ்தம்பித்து வருகிறது.

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், ஷிவானி நாராயணன், மைனா நந்தினி, மகேஸ்வரி, சந்தானபாரதி உள்ளிட்ட பலர் நடித்து வரும் ‘விக்ரம்’ படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரன் பணிபுரிந்து வருகிறார் என்பதும் அனிருத் இசையமைத்து வருகிறார் என்பதும், இந்த படம் அடுத்த வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.