போட்ட முதலீட்டை சாட்டிலைட்-டிஜிட்டலில் எடுத்துவிட்டாரா கமல்? 'விக்ரம்' பட அப்டேட்!
- IndiaGlitz, [Tuesday,March 01 2022]
உலகநாயகன் கமலஹாசன் நடித்து தயாரித்து வரும் ’விக்ரம்’ படத்தின் பட்ஜெட் செலவு முழுவதையும் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் விற்பனையில் எடுத்து விட்டதாக கூறப்படுவது திரையுலகினரை பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
உலக நாயகன் கமல்ஹாசன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், ஷிவானி நாராயணன் உள்பட பலரது நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’விக்ரம்’.
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தை ஏப்ரல் 28-ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’விக்ரம்’ படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை ஹாட்ஸ்டார் டிஸ்னி ஓடிடி நிறுவனம் ரூ 115 கோடிக்கு வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் பட்ஜெட் 110 கோடி என்று கூறப்பட்ட நிலையில் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமை விற்பனையிலேயே தனது முதலீட்டை தயாரிப்பாளர் கமல்ஹாசன் எடுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இனி அடுத்ததாக திரையரங்குகளில் ரிலீஸாகி கிடைக்கும் வசூல் முழுவதுமே கமலஹாசனுக்கு லாபமாக இருக்கும் என்று கூறப்படுவதால் திரையுலகினர் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர். இந்த படம் திரையரங்குகளில் வெளியான ஒரே மாதத்தில் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது .