துடிக்குது புஜம், ஜெயிப்பது நிஜம்: 'விக்ரம்' அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக்!

  • IndiaGlitz, [Saturday,July 10 2021]

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் ‘விக்ரம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நேற்றே தகவல் தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில் சற்று முன் ‘விக்ரம்’ படத்தின் அட்டகாசமான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. மூன்று வித்தியாசமான கோணங்களில் கமலஹாசன் இருக்கும் இந்த பர்ஸ்ட் போஸ்டர் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கேப்ஷனாக கடந்த 1986ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ படத்தின் பாடல் வரிகளும் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிகள் இதோ:

யுத்தத்தால் அதோ அதோ விடியுது
சத்தங்கள் அராஜகம் அழியுது
ரத்தத்தால் அதோ தலை உருளுது
சொர்க்கங்கள் இதோ இதோ தெரியும்
துடிக்குது புஜம்
ஜெயிப்பது நிஜம்

இதனை அடுத்து இந்த படம் 86ல் வந்த ‘விக்ரம்’ படத்தின் இரண்டாம் பாகமாக இந்த படம் இருக்குமோ என்ற சந்தேகத்தை ரசிகர்கள் கிளப்பி வருகின்றனர். மேலும் ரசிகர்கள் விக்ரம் படத்தில் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ‘விருமாண்டி’ படத்தின் போஸ்டரை ஞாபகப்படுத்துவதாக கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்சேதுபதி மற்றும் பகத் பாசில் நடிப்பதை இந்த போஸ்டர் உறுதி செய்துள்ளது என்பதும், அனிருத் இசையமைப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

நின்று கொண்டே பைக் ஓட்டும் கீர்த்தி பாண்டியன்: வைரல் வீடியோ!

பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியன் மகளும், சமீபத்தில் வெளியான 'அன்பிற்கினியாள்' படத்தில் நடித்தவருமான நடிகை கீர்த்தி பாண்டியன் நின்றுகொண்டே ராயல் என்ஃபீல்டு பைக் ஓட்டிய வீடியோ

ஒரு கேட்ச் பிடித்து மூத்த வீரர்களையே மிரட்டிய இளம் வீராங்கனை… டிரெண்டிங் வீடியோ வைரல்!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் தற்போது இங்கிலாந்து நாட்டுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் கிரிக்கெட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றனர்

"சொல்லின் செல்வர்" சத்தியசீலன் அவர்கள் காலமானார்....!

மூத்த தமிழறிஞரான சோ.சத்தியசீலன் அவர்கள் வயது முதிர்வு காரணமாக இன்று உயிரிழந்தார்.

'தல' வலிமை ஷூட்டிங் தொடங்கியாச்சு....ரசிகர்கள் மகிழ்ச்சி....!

பிரபல இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், தல அஜித் நடித்துவரும் திரைப்படம் தான் வலிமை. இப்படத்திற்கான அப்டேட்டுகள் குறித்து ரசிகர்கள் சாமியார்கள் முதல் கிரிக்கெட் பிரபலங்கள் வரை

'D43' படத்தில் இருந்து கார்த்திக் நரேன் விலகலா? உறுதி செய்யும் புகைப்படம்!

தனுஷ் நடித்துவரும் 'D43' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.