'விக்ரம்' படத்தில் பிரமாண்டமான இசை வெளியிட்டு விழா: எங்கே தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான திரைப்படம் ’விக்ரம்’. இந்த படம் வரும் ஜூன் 3ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் ’விக்ரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் துபாய் அல்லது சென்னையில் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது .
இந்த நிலையில் தற்போது இசை வெளியீட்டு விழா குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதன்படி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 15ஆம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதே நாளில் இந்த படத்தின் டிரைலரும் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், ஷிவானி நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட உள்ளது என்பது தெரிந்ததே.
உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தின் பிரமாண்டமான இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா!
— Vijay Television (@vijaytelevision) May 10, 2022
மே 15-ஆம் தேதி - மாலை 6 மணிக்கு
நேரு உள்விளையாட்டரங்கம், சென்னை. #KamalHaasan #VikramFromJune3 #VikramAudioLaunch #VikramTrailer pic.twitter.com/Fd5nHZKUYt
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com