கமல்ஹாசன் திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ்: ரசிகர்கள் உற்சாகம்

  • IndiaGlitz, [Saturday,December 28 2019]

அறிமுக நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்கள் முதல் மாஸ் நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்கள் வரை ஒவ்வொரு திரைப்படத்திற்கும் டீஸர், டிரெய்லர் ஆகியவை வெளியிடுவது வழக்கமான ஒன்றே. இந்த நிலையில் கமலஹாசன் நடித்த திரைப்படம் ஒன்றின் ட்ரெய்லர் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது

கமலஹாசன் நடித்த ’விஸ்வரூபம் 2’ கடந்த ஆண்டு வெளியான நிலையில் அதன் பிறகு அவர் நடித்த படம் வெளியாகாததால் ரசிகர்கள் பெரும் அதிருப்தியில் இருந்தனர். இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் செயலியில் கமல்ஹாசன் நடித்த ’வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ வெளியாக இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த படத்திற்காக தற்போது ஒரு புதிய ட்ரெய்லர் இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த ட்ரெய்லர் கமல் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2004ம் ஆண்டு சரண் இயக்கத்தில் கமல்ஹாசன், சினேகா, பிரகாஷ்ராஜ் நடிப்பில் உருவான முழு நீள காமெடி படமான ’வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ திரைப்படம் ஒரு முழுநீள காமெடி படம் என்பதும் கமல்ஹாசனின் வெற்றி படங்களில் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது