பிரபல சமூக வலைத்தளத்தில் கமல்ஹாசன். ஸ்ருதிஹாசன் வாழ்த்து
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலிவுட் மட்டுமின்றி உலகில் உள்ள சினிமா பிரபலங்கள் அனைவருமே சமூக வலைத்தளங்களில் இணைந்து தங்கள் படங்கள் குறித்த தகவல்களை பதிவு செய்து வருவதை நாம் அவ்வப்போது பார்த்து வருகிறோம். கோலிவுட்டை பொறுத்தவரையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் அடுத்தடுத்த நிலையில் உள்ள ஸ்டார்கள் வரை அனைவருமே முக்கிய சமூக வலைத்தளமான டுவிட்டரில் இணைந்துள்ளனர். இந்நிலையில் நேற்று குடியரசு தினம் முதல் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் டுவிட்டரில் இணைந்துள்ளார்.
ஏற்கனவே கமல்ஹாசன் அவர்கள் ஃபேஸ்புக், யூடியூப் உள்பட பல சமூக இணையதளங்களில் இருக்கும் நிலையில் நேற்று முதல் டுவிட்டரிலும் இணைந்துள்ளது டுவிட்டர் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கமல்ஹாசன் பாடிய தேசிய கீதம் வீடியோ ஒன்று அவருடைய டுவிட்டர் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கமல்ஹாசன் தனது முதல் டுவீட்டாக, "India's freedom struggle remains unique even today. Respecting it is d only way to keep it & set new world standards" என்று இந்தியாவின் பெருமை குறித்து டுவீட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கமல்ஹாசன் டுவிட்டரில் இணைந்தவுடன் முதல் ஆளாக அவருடைய மகள் ஸ்ருதிஹாசன் அவரை வரவேற்று அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி டுவிட்டரில் இணைந்த ஒருசில மணி நேரங்களில் கமல்ஹாசன் டுவிட்டர் பக்கத்தை 25,000க்கும் அதிகமானோர் ஃபாலோ செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments