close
Choose your channels

கமல்ஹாசனின் 'தக்லைஃப்' படத்தின் ரிலீஸ் தேதி இதுவா? 5 நாள் தொடர் விடுமுறை..!

Saturday, October 26, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது ‘தக்லைஃப்’ என்ற படத்தில் நடித்து முடிந்துள்ள நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் கசிந்துள்ளது.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் பிரபல இயக்குனர் மணிரத்னம் இணைந்த திரைப்படம் ‘தக்லைஃப்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில் நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தை பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்ட நிலையில் தொழில்நுட்ப பணிகள் காலதாமதம் ஆவதால் தற்போது தமிழ் புத்தாண்டு தினத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

‘தக்லைஃப்’ திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாகவும், அன்றைய தினம் மகாவிர் ஜெயந்தி விடுமுறை அதனையடுத்து சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை தமிழ் புத்தாண்டு தினம் என ஒரு மொத்தம் ஐந்து நாட்கள் விடுமுறை தினம் என்பதால் இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் சாதனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, நாசர், அலி ஃபைசல், பங்கஜ் திரிபாதி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, வையாபுரி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment