'லியோ' வியாபாரத்தை முந்தியதா 'தக்லைஃப்'. முக்கிய பிசினஸ் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Monday,May 13 2024]

தளபதி விஜய் நடித்த ’லியோ’ படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமை வியாபாரத்தை கமல்ஹாசனின் ‘தக்லைஃப்’ படத்தின் வியாபாரம் முந்திவிட்டதாக இணையத்தில் ஒரு தகவல் மிக வேகமாக பரவி வருகிறது.

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சிம்பு முதல் முறையாக இணைந்து நடிக்கும் ‘தக்லைஃப்’ திரைப்படத்தை மணிரத்னம் இயக்கி வருகிறார் என்பதும் ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை ஏபி இன்டர்நேஷனல் மற்றும் ஹோம் ஸ்கிரீன் என்டர்டைன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதிகாரப்பூர்வமற்ற தகவலின்படி இந்த படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமை 63 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர் விஜய்யின் ‘லியோ’ திரைப்படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமை 60 கோடி ரூபாய்க்கு விற்பனையானதாக கூறப்பட்ட நிலையில் ‘லியோ’ பிசினஸை ‘தக்லைஃப்’ முந்திவிட்டதாக கூறப்படுகிறது.

கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, நாசர், அலி ஃபைசல், பங்கஜ் திரிபாதி, அசோக் செல்வன், ஜோஜு ஜார், ஐஸ்வர்யா லட்சுமி, வையாபுரி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது. கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.