தமிழ் சினிமாவில் புதிய சாதனை.. கமல்ஹாசனின் 'தக்லைஃப்' படம் குறித்த ஆச்சரியமான தகவல்..!
- IndiaGlitz, [Friday,September 20 2024]
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தக்லைஃப்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவு பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாகவும், இன்னும் சில நாட்களில் கிராபிக்ஸ் உள்பட தொழில்நுட்ப பணிகள் ஆரம்பமாகும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், ‘தக்லைஃப்’ படத்தின் பிசினஸ் குறித்த ஆச்சரியமான தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை முன்னணி நிறுவனம் ஒன்று வாங்கியிருப்பதாகவும், கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில், தமிழ் சினிமாவில் மிக அதிக தொகை கொடுத்து வாங்கப்பட்ட டிஜிட்டல் உரிமை ‘தக்லைஃப்’ திரைப்படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, நாசர், அலி ஃபைசல், பங்கஜ் திரிபாதி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, வையாபுரி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.