சிம்புவின் 50வது படத்தில் கமல்ஹாசன்?  இயக்குனர் இந்த பிரபலமா?

  • IndiaGlitz, [Saturday,June 24 2023]

சிம்புவின் 48வது திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் வெளியான செய்தியை பார்த்தோம்.

மேலும் சிம்புவின் 49 வது படத்தை இயக்கும் இயக்குனர் குறித்த அறிவிப்பு சிம்பு லண்டனில் இருந்து சென்னை திரும்பியதும் வெளியாகும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் சிம்புவின் 50வது திரைப்படத்தை இயக்குவது யார் என்ற கேள்வி ரசிகர் மனதில் இருந்த நிலையில் அதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது.

சிம்புவின் 50 வது படத்தை மணிரத்னம் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தையும் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் கமல்ஹாசன் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’செக்கச்சிவந்த வானம்’ திரைப்படத்தில் சிம்பு ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்த நிலையில் தற்போது அவரது 50 வது படத்தை மணிரத்னம் இயக்க இருக்கிறார் என்ற தகவல் அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

‘பொன்னியின் செல்வன்’ படத்தை அடுத்து கமல்ஹாசனின் 234வது திரைப்படத்தை இயக்கும் ஆரம்பகட்ட பணிகளில் தற்போது மணிரத்னம் இருக்கும் நிலையில் இந்த படத்தை முடித்தவுடன் அவர் சிம்புவின் 50வது படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது.

More News

நானும் கிரிக்கெட் மைதானம் உருவாக்குவேன்: நடராஜன் முன்னிலையில் அறிவிப்பு வெளியிட்ட நடிகர்..!

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது சொந்த ஊரில் கிரிக்கெட் மைதானம் அமைத்துள்ள நிலையில் அவரைப் போலவே நானும் கிரிக்கெட் மைதானம் ஒன்றை உருவாக்குவேன்

'வலிமை' நடிகை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை.. என்ன காரணம்?

அஜித் நடித்த 'வலிமை' உள்பட ஒரு சில திரைப்படங்களிலும் தொலைக்காட்சிகளிலும் நடித்த நடிகை ஒருவர் பிரபல யூடியூபராகவும் இருந்து வரும் நிலையில் அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து

ஆயுத பூஜைக்கு சோலோவாக ரிலீஸ் ஆகும் 'லியோ' : முக்கிய நடிகரின் படம் பின்வாங்குவதாக தகவல்..!

 தளபதி விஜய் நடித்துவரும் 'லியோ' திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதே தேதியில் ரிலீஸ் ஆக திட்டமிடப்பட்டிருந்த திரைப்படம் ஒன்று

'லியோ' படத்தில் அர்ஜுன் லுக் இதுவா? இதுவரை இவரை இப்படி பார்த்ததே இல்லையே..!

தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ' திரைப்படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் ஒரு முக்கியத்துவம் வேடத்தில் நடித்து வரும் நிலையில் 'லியோ' படத்தில் அவருடைய கேரக்டரில் லுக் குறித்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

யூடியூப் பாடகரை கண்டுபிடித்த ஹாரிஸ் ஜெயராஜ்.. ஒரே நேரத்தில் 2 இயக்குனர்கள் படங்களில் வாய்ப்பு..!

பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், யூடியூபர் ஒருவரை பாடகர் ஆக தேர்வு செய்த நிலையில் அந்த பாடகர் ஒரே நேரத்தில் இரண்டு பிரபல இயக்குனர்கள் படங்களில் பாடும் வாய்ப்பை பெற்று உள்ளார் என்ற தகவல் ஆச்சரியத்தை