அரசியலிலும் விருதினை குவிக்கும் கமல்ஹாசன்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் கமல்ஹாசன் இதுவரை 'மூன்றாம் பிறை', 'நாயகன்' மற்றும் 'இந்தியன்' ஆகிய மூன்று படங்களுக்காக தேசிய விருது பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி இந்தியாவின் உயர்ந்த விருதான பத்மஸ்ரீ, பத்மபூஷன் ஆகிய விருதுகள் உள்பட பல விருதுகளை அவர் திரையுலகில் செய்த சாதனைகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கிய கமல்ஹாசன் தனது கட்சியின் கொள்கைகளை பரப்புவதற்காகவும், நாட்டில் நடைபெறும் தவறுகளை சுட்டிக்காட்டவும் 'மய்யம் விசில்' என்ற செயலியை அறிமுகம் செய்தார்.
இந்த செயலிக்கு தற்போது இரண்டு விருதுகள் கிடைத்துள்ளது. இதுகுறித்து கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'இந்திய அளவிலான மொபைல் மார்க்கெட்டிங் அசோசியேஷன் விருதுகளில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மய்யம் விசில் செயலி, வணிக நோக்கமில்லாமல், சமூக தாக்கத்தை ஏற்படுத்தியதற்காக, இந்தியாவின் சிறந்த செயலியாக “வெள்ளிப் பதக்கமும்”, புவி சார்ந்த தகவல் தொடர்பு சேவையில் “வெண்கலப் பதக்கமும்” பெற்றுள்ளது.
ஒரு அரசியல் கட்சியாக இதுவரை யாருக்கும் கிடைத்திராத அங்கீகாரம். மக்கள் பிரச்சனைகளை கருத்துடன் அணுகி, அதை தீர்ப்பதற்கு மய்யம் விசில் செயலியைப் பயன்படுத்தி, இவ்விருதுகள் தமிழ்நாட்டிற்கு கிடைத்திட காரணமாகிய எங்கள் களவீரர்களுக்கும், களவீராங்கனைகளுக்கும், நன்றி. இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
திரையுலகை அடுத்து அரசியல் உலகிலும் விருதுகளை குவிக்க தொடங்கியுள்ள கமல்ஹாசனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
ஒரு அரசியல் கட்சியாக இது வரை யாருக்கும் கிடைத்திராத அங்கீகாரம். மக்கள் பிரச்சனைகளை
— Kamal Haasan (@ikamalhaasan) September 29, 2018
கருத்துடன் அணுகி, அதை தீர்ப்பதற்கு மய்யம் விசில் செயலியைப் பயன்படுத்தி, இவ்விருதுகள் தமிழ்நாட்டிற்குக் கிடைத்திடக் காரணமாகிய எங்கள் களவீரர்களுக்கும், களவீராங்கனைகளுக்கும்,நன்றி. pic.twitter.com/KYFdI3Mvmf
இந்திய அளவிலான @MMA_APAC விருதுகளில், @maiamofficial கட்சியின் மய்யம் விசில் செயலி, வணிக நோக்கமில்லாமல், சமூக தாக்கத்தை ஏற்படுத்தியதற்காக, இந்தியாவின் சிறந்த செயலியாக “வெள்ளிப் பதக்கமும்”, புவி சார்ந்த தகவல் தொடர்பு சேவையில் “வெண்கலப் பதக்கமும்” பெற்றுள்ளது. pic.twitter.com/Gyis0YxhWv
— Kamal Haasan (@ikamalhaasan) September 29, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments