அரசியலிலும் விருதினை குவிக்கும் கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Saturday,September 29 2018]

நடிகர் கமல்ஹாசன் இதுவரை 'மூன்றாம் பிறை', 'நாயகன்' மற்றும் 'இந்தியன்' ஆகிய மூன்று படங்களுக்காக தேசிய விருது பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி இந்தியாவின் உயர்ந்த விருதான பத்மஸ்ரீ, பத்மபூஷன் ஆகிய விருதுகள் உள்பட பல விருதுகளை அவர் திரையுலகில் செய்த சாதனைகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கிய கமல்ஹாசன் தனது கட்சியின் கொள்கைகளை பரப்புவதற்காகவும், நாட்டில் நடைபெறும் தவறுகளை சுட்டிக்காட்டவும் 'மய்யம் விசில்' என்ற செயலியை அறிமுகம் செய்தார்.

இந்த செயலிக்கு தற்போது இரண்டு விருதுகள் கிடைத்துள்ளது. இதுகுறித்து கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'இந்திய அளவிலான மொபைல் மார்க்கெட்டிங் அசோசியேஷன் விருதுகளில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மய்யம் விசில் செயலி, வணிக நோக்கமில்லாமல், சமூக தாக்கத்தை ஏற்படுத்தியதற்காக, இந்தியாவின் சிறந்த செயலியாக “வெள்ளிப் பதக்கமும்”, புவி சார்ந்த தகவல் தொடர்பு சேவையில் “வெண்கலப் பதக்கமும்” பெற்றுள்ளது.

ஒரு அரசியல் கட்சியாக இதுவரை யாருக்கும் கிடைத்திராத அங்கீகாரம். மக்கள் பிரச்சனைகளை கருத்துடன் அணுகி, அதை தீர்ப்பதற்கு மய்யம் விசில் செயலியைப் பயன்படுத்தி, இவ்விருதுகள் தமிழ்நாட்டிற்கு கிடைத்திட காரணமாகிய எங்கள் களவீரர்களுக்கும், களவீராங்கனைகளுக்கும், நன்றி. இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

திரையுலகை அடுத்து அரசியல் உலகிலும் விருதுகளை குவிக்க தொடங்கியுள்ள கமல்ஹாசனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

More News

பிக்பாஸ் 2 வெற்றியாளர் இவர்தான்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிளைமாக்ஸ் இன்றும் நாளையும் நடைபெறவுள்ள நிலையில் நேற்றிரவுடன் வாக்குப்பதிவு செய்யும் முறை முடிந்துவிட்டது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது?

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 2 ஆம் வாரத்தில் தொடங்கும் என்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது.

உங்க சிரிப்பு கேவலமாக இருந்தது: கீர்த்தி சுரேஷை வம்புக்கு இழுக்கும் ஸ்ரீரெட்டி

கீர்த்தி சுரேஷ், உங்கள் சிரிப்பு மிகவும் கேவலமாக இருந்தது. கவலைப்படாதீர்கள் மேடம். நீங்கள் எப்போதும் உயர்ந்த இடத்தில் இருக்க முடியாது.

ஆயிரம் வழக்கு போட்டாலும் எதிர்கொள்வேன்: விடுதலைக்கு பின் கருணாஸ் பேட்டி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் காவல்துறை உயரதிகாரி ஆகியோர்களை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்ததாக நடிகரும் திருப்புவனம் எம்.எல்.ஏவுமான கருணாஸ் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்

தமிழ் நடிகை மீது தமிழக பாஜக பதிவு செய்த வழக்கு

சிம்பு நடித்த 'குத்து', தனுஷ் நடித்த 'பொல்லாதவன் உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா. இவர் சமீபத்தில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பிரதமர் மோடியை 'திருடர்' என விமர்சனம் செய்தார்.