'மருதநாயகம்' படத்தில் கமலுக்கு பதில் இந்த பிரபல நடிகரா? கைகொடுக்குமா மாஸ்டர் பிளான்..!

  • IndiaGlitz, [Wednesday,March 29 2023]

கமல்ஹாசனின் கனவு படம் என்றால் அது 'மருதநாயகம்’ தான் என்பதும் கடந்த 1997ம் ஆண்டு இந்த படத்தை எடுக்க அவர் முயற்சி செய்த நிலையில் பட்ஜெட் காரணமாக இந்த படம் நிறுத்தப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தை மீண்டும் கமல்ஹாசன் உருவாக்க முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் ஏற்கனவே கமல்ஹாசன் 'மருதநாயகம்’ படம் இனி உருவானால் அதில் தான் நடிக்கப் போவதில்லை என்று கூறியிருந்தார். அந்த வகையில் தற்போது 'மருதநாயகம்’ படத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 1997 ஆம் ஆண்டு எம்ஜிஆர் பிலிம் சிட்டியில் 'மருதநாயகம்’ படத்தின் நிகழ்ச்சி நடைபெற்ற போது இங்கிலாந்து ராணி எலிசபெத் வருகை தந்திருந்தார். மேலும் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உள்பட பலர் வருகை தந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் 'மருதநாயகம்’ படத்தை உருவாக்க கமல் முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. மேலும் 'மருதநாயகம்’ படத்தில் ஏற்கனவே 30 நிமிட காட்சிகள் முடித்து விட்டது என்றாலும் அந்த காட்சிகளும் படத்தில் இடம்பெறும் என்றும் அதற்கு கமல்ஹாசன் ஒரு மாஸ்டர் பிளான் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் ரூபாய் 300 கோடிக்கு மேல் வசூல் செய்தது மற்றும் சரித்திர கதையம்சம் கொண்ட ’பொன்னியின் செல்வன்’ ரூ.500 கோடிக்கு மேல் வசூல் செய்தது ஆகியவைதான் கமல்ஹாசன் மீண்டும் 'மருதநாயகம்’ படத்தை உருவாக்க முடிவு செய்ததற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.


 

More News

'ஏகே 62' படத்தை அடுத்து விக்னேஷ் சிவனின் அடுத்த படமும் டிராப்?

அஜித் நடிக்க இருக்கும் 'ஏகே 62' என்ற திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருந்த நிலையில் திடீரென அவர் அந்த படத்தில் இருந்து விலகினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

குறைவாக சம்பளம் கொடுத்ததால் திருடினேன்.. ஐஸ்வர்யா வீட்டில் திருடிய ஈஸ்வரி வாக்குமூலம்..!

ஐஸ்வர்யா வீட்டில் திருடிய ஈஸ்வரி, காவல்துறையிடம் கொடுத்த வாக்குமூலத்தில் தனக்கு குறைவாக சம்பளம் கொடுத்ததால் தான் திருடினேன் என்றும் தான் திருடுவதற்கு காரணம் ஐஸ்வர்யாவின்

நியூஸ் ரீடர் கண்மணியின் வளைகாப்பு நிகழ்ச்சி.. கணவர் கொடுத்த சர்ப்ரைஸ் பரிசு..!

சன் டிவி செய்தி வாசிப்பாளர் கண்மணி சமீபத்தில் கர்ப்பமான நிலையில் அவரது வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. 

பைக், கார்களுக்கு பதில் வித்தியாசமான பரிசு கொடுத்த வெற்றிமாறன்.. உதவி இயக்குனர்கள் மகிழ்ச்சி..!

தமிழ் திரையுலகை பொருத்தவரை ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால் அந்த படத்தின் இயக்குனருக்கு தயாரிப்பாளர் பைக், கார் வாங்கி கொடுப்பார் என்பதும் அதேபோல் இயக்குனர் தங்களது

தனுஷ் பாடலுடன் 'நாட்டு நாட்டு' பாடலை ஒப்பிட்ட எம்.எம்.கீரவாணி: எந்த பாடல் தெரியுமா?

பிரம்மாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான 'ஆர்.ஆர்.ஆர்' என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' என்ற பாடலுக்கு சமீபத்தில் ஆஸ்கார் விருது கிடைத்தது என்பதை ஏற்கனவே