ரூ.300 கோடிக்கும் அதிகமான பிசினஸ்.. டிஜிட்டல் ரைட்ஸ்-இல் மட்டும் பணத்தை அள்ளும் கமல் படங்கள்..!
- IndiaGlitz, [Sunday,July 23 2023]
கமல்ஹாசனின் அடுத்த இரண்டு படங்களின் டிஜிட்டல் ரைட்ஸ் மட்டுமே 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பிசினஸ் செய்துள்ளதாக கூறப்படுவது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாயகன் கமலஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ’இந்தியன் 2’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு தமிழ்புத்தாண்டு தினத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் கமல்ஹாசனின் ‘KH 233’ படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் உரிமையை ரூ.125 கோடிக்கு நெட்பிளிக்ஸ் வாங்கி உள்ளதாக கூறப்பட்டது. இந்திய சினிமாவில் இது ஒரு சாதனையாகவும் கருதப்பட்டது.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி ’இந்தியன் 2’ படத்தின் அனைத்து மொழிகளின் டிஜிட்டல் ரைட்ஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.220 கோடிக்கு வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் ‘KH233’ மற்றும் ‘இந்தியன் 2’ ஆகிய இரண்டு திரைப்படங்களின் டிஜிட்டல் உரிமை மட்டும் 345 கோடிக்கு நெட்பிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
மொத்தத்தில் இந்த இரண்டு படங்களின் அனைத்து பிசினஸையும் சேர்த்தால் ஆயிரம் கோடி ரூபாய் வியாபாரத்தை பெறும் என்றும் கூறப்படுகிறது.