close
Choose your channels

முதல்முறையாக 3வது பாகமாக உருவாகும் கமல்ஹாசன் படம்.. உதயநிதி அளித்த மாஸ் தகவல்..!

Thursday, June 29, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் மூன்றாம் பாகம் குறித்த தகவலை தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியன் 2’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் உதயநிதி ஸ்டாலின் இந்த படம் குறித்து கூறுகையில் 'இந்தியன்’ படத்தின் மூன்றாவது பாகம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

’இந்தியன் 2’ படத்தின் போது எடுக்கப்பட்ட காட்சிகள் இன்னும் அதிகமாக இருப்பதாகவும் அதை வைத்து மூன்றாம் பாகம் உருவாக்கும் திட்டம் உருவாகி உள்ளதாகவும் அவர் கூறினார்

மேலும் ’இந்தியன் 2’ படத்தை பார்த்து கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் ஆகியோர் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் இந்த படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் ’இந்தியன் 2’ படத்தின் 20 நாள் படப்பிடிப்பு இன்னும் பாக்கி இருப்பதாகவும் அதுமட்டுமின்றி ஏராளமான கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகளும் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

முதல் முறையாக கமல்ஹாசனின் திரைப்படம் மூன்றாவது பாகம் உருவாக இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment