கமல்ஹாசனின் 'இந்தியன் 2' படத்தில் ரஜினிகாந்த் இணைகிறாரா? ஆச்சரிய தகவல்..!

  • IndiaGlitz, [Monday,April 29 2024]

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்க இருப்பதாகவும் சிங்கிள் பாடல், டீசர், டிரைலர் ஆகியவற்றை அடுத்தடுத்து வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் 'இந்தியன் 2’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடத்த ஷங்கர் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான பணிகள் தொடங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த இசை வெளியீட்டு விழாவில் தமிழ் திரை உலகின் முன்னணி பிரபலங்கள் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக இந்த இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் ’பொன்னியின் செல்வன்’ பட இசை வெளியீட்டு விழாவிற்கு பிறகு மீண்டும் கமல், ரஜினி இருவரும் ஒரே விழாவில் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடப்பட்டது.

அதுமட்டுமின்றி ஷங்கர் தற்போது ’கேம் சேஞ்சர்’ என்ற திரைப்படத்தை இயக்கி வரும் நிலையில் அந்த படத்தின் நாயகன் ராம்சரண் தேஜாவும் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வார் என்றும் அதுமட்டுமின்றி வேறு சில பிரபலங்களிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் ’இந்தியன் 2’ இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெறும் என்றும் ரசிகர்களுக்கு இந்த விழா ஒரு விருந்தாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

 

More News

அஜித் பிறந்த நாளில் 3 அப்டேட்டுக்கள்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம்ம விருந்து..!

அஜித் பிறந்தநாளான மே 1ஆம் தேதி 3 அப்டேட்டுகள் வெளியாக இருப்பதாக தகவல் வந்துள்ளதை அடுத்து அவரது ரசிகர்களுக்கு அன்றைய தினம் செம விருந்து காத்திருக்கிறது என்று கூறப்படுகிறது.

எங்க கல்யாணத்துல எங்களுக்கே சாப்பாடு கிடைக்கல - மு.க. முத்துவின் மனைவி சொன்ன சுவாரஸ்ய தகவல்.

திருமணத்தின் போது அளவுகடந்து வந்த விருந்தினர் கூட்டத்தால் மணமக்கள் எங்களுக்கே சாப்பாடு கிடைக்கவில்லை என மு.க. முத்துவின் மனைவி சிவகாமிசுந்தரி தெரிவித்துள்ளார்.

நீ யாரு.. நல்லா வருவேடா... கவுண்டமணியிடம் வாழ்த்து பெற்ற 'சிறகடிக்க ஆசை' நடிகர்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் ஒருவரை கவுண்டமணி அழைத்து 'நீ யாரு,

ரஜினி, விஜய் படங்களை அடுத்து ஜப்பானில் சக்கை போடு போடும் கார்த்திக் சுப்புராஜ் படம்.. மகிழ்ச்சியான பதிவு..!

கடந்த பல ஆண்டுகளாக ஜப்பானில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்கள் வசூலை குவித்து வருகிறது என்பதும் அவர் நடித்த 'முத்து' படத்தில் இருந்து அதன் பிறகு வெளியான அனைத்து படங்களும் ஜப்பானில் அதிக வசூலை

அருண் விஜய்யின் 'ரெட்ட தல'.. சூப்பர் அப்டேட்டால் ரசிகர்கள் உற்சாகம்..!

அருண் விஜய்யின் 36 வது திரைப்படமான 'ரெட்ட தல' என்ற படம் குறித்த அறிவிப்பு கடந்த ஒரு வாரத்திற்கு முன் வெளியான நிலையில் தற்போது அந்த படத்தின் சூப்பர் அப்டேட்டை அருண் விஜய் தனது எக்ஸ் தள