மகளிர் தின கூட்டத்தில் கமல் செய்த சத்தியம்
- IndiaGlitz, [Thursday,March 08 2018]
இன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கமல்ஹாசனின் 'மக்கள் நீதி மய்யம்' கட்சியின் மகளிர் பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன் ஒரு சத்தியம் செய்தார். தமது கட்சி ஒருபோதும் கயவர்களுடனும், திருடர்களுடனும் கூட்டணி வைக்காது என்றும் இது சத்தியம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் ஓட்டுசாவடி என்பது கோவில் போன்றது என்றும், அந்த கோவிலுக்கு அனைவரும் சென்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்றும் கமல் தெரிவிதார்.
மேலும் தமிழகத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு சதவீதம் மற்ற மாநிலங்களை காட்டிலும் குறைவாக உள்ளதாகவும், இந்த எண்ணிக்கை உயர வேண்டும் என்று கூறிய கமல், தமிழகத்தில் 3.60 கோடி பெண்கள் பிறக்காமலேயே இறந்து போய் உள்ளதாகவும் தெரிவித்தார்.