19 வருடங்களுக்கு பின் வெளிவரும் கமல்ஹாசன் பட டிரைலர்!

  • IndiaGlitz, [Wednesday,November 06 2019]

உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்தநாள் நாளை மிகச்சிறப்பாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்தக் கொண்டாட்டத்தை கமல் ரசிகர்கள் இன்று முதலே உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் கமல்ஹாசன் திரையுலகில் 60 ஆண்டுகள் சாதனை புரிந்ததை அடுத்து மூன்று நாட்கள் விழா எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 7, 8, 9 ஆகிய தினங்களில் நடைபெறும் இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இசைஞானி இளையராஜா ஆகியோர் நவம்பர் 9ஆம் தேதி நடைபெறும் விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த நிலையில் இன்று முதலே அனைத்து தொலைக்காட்சிகளிலும் கமல்ஹாசன் நடித்த ஹிட் மற்றும் பிரபலமான படங்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சமூக வலைதளப் பக்கத்தில் கமலஹாசன், ஷாருக்கான், ராணி முகர்ஜி, ஹேமாமாலினி உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவான ’ஹே ராம்’ படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. கடந்த 2000ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தின் டிரெய்லரை அப்போது இன்டர்நெட் போன்ற வசதிகள் இல்லாததால் பெரும்பாலானோர் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஏன் கமல் ரசிகர்களே கூட பலர் பார்த்திருக்க மாட்டார்கள்.

இந்த நிலையில் தற்போது இந்த ட்ரெய்லர் வெளியாகியுள்ளது கமல் ரசிகர்கள் மட்டுமன்றி அனைத்து தரப்பினருக்கும் ஒரு விருந்தாக உள்ளது. கமல்ஹாசன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்படும் காட்சியை பார்க்கும்போது பார்வையாளர்களை அதிர வைக்கும் என்பது நிச்சயம். இந்தியத் திரையுலகில் குறிப்பிட்டுச் சொல்லும் படங்களில் ஒன்றான இந்த படம் இன்னும் பல நாட்களுக்கு பேசப்படும் படமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.