கமல்ஹாசன் பதிவு செய்த காந்தி டுவீட்

  • IndiaGlitz, [Friday,October 04 2019]

நேற்று முன் தினம் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை நாடு முழுவதும் கொண்டாடிய நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் சிலர் மகாத்மா காந்தி அவர்களின் அஸ்தி களவாடி சென்றுவிட்டனர். அதுமட்டுமின்றி காந்தியின் புகைப்படத்தை சேதம் செய்து, அதில் தேசத்துரோகி என எழுதிவிட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவத்தை பலர் கண்டித்த நிலையில் இதனை கண்டிக்கும் விதமாக கமல்ஹாசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் எழுதியுள்ள கவிதை தான் இது:

எம் காந்தியின் திருநீற்றை  களவுற்ற  
பக்தர்காள்
உம் நெத்தியில் பூசிடவைத்த  அச்சாம்பலை  
ஏற்றதில் மகிழ்கிறோம். இன்னமும் உளது நீர்
சுட்டதின் பிணக்குவியல்  கூடிடக்கூடிட
உம்பக்தியின் அடிநாதம் காந்தியின் சாம்பலுடன்  கைலாயமெய்தவே  
கணக்கிலா இந்தியர்கள் வழிகோலுகின்றோம் வாழ்த்துடன்கூடியே

கமல்ஹாசனின் இந்த கவிதை தமிழில் இருந்தாலும் பலர் புரியவில்லை என கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர்.

கடந்த 1948ஆம் ஆண்டு மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் அவருடைய அஸ்தி, ஆற்றில் கரைக்கப்படாமல் ஒவ்வொரு மாநிலத்திற்கும் பிரித்து கொடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருவதோடு, அவருடைய பிறந்த நாள் அன்று வழிபட்டும் வரப்படுகிறது. இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்திற்கு கொடுக்கப்பட்ட அஸ்திதான் தற்போது திருடிபோய்விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.