close
Choose your channels

'தேவர் மகன்' போஸில் கமல்ஹாசன்: அக்சராஹாசன் வெளியிட்ட மாஸ் புகைப்படம்!

Tuesday, October 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் இணைந்து நடித்த ’தேவர் மகன்’ திரைப்படத்தில் சிவாஜி கணேசன் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து இருப்பது போன்றும் அவர் அருகில் கமல்ஹாசன் கைகட்டி நிற்பது போன்ற புகைப்படம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் வைரல் ஆனது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த புகைப்படத்தில் கமல்ஹாசன் ’தேவர் மகன்’ சிவாஜி பாணியில் நாற்காலியில் உட்கார்ந்து இருப்பது போதும் அவர் அருகில் அக்சராஹாசன், கமல்ஹாசனை போல் கையை கட்டிக்கொண்டு நின்று கொண்டிருப்பது போல ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அக்சராஹாசன் வெளியிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான ’தேவர் மகன்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் கமல்ஹாசன் சில ஆண்டுகளாக செய்து வருகிறார் என்பதும் விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு ‘தலைவன் இருக்கிறான்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் அக்சராஹாசனுக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அவர் ’விக்ரம்’ படத்தின் அடுத்த பாகத்தில் நடிப்பாரா? அல்லது ’தேவர்மகன்’ படத்தின் அடுத்த பாகத்தில் நடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment