வாழ்க்கை கற்பிக்காததை சாவா கற்பிக்கும்? கமல்ஹாசனின் கொரோனா கவிதை

கொரோனா வைரஸால் உலகில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் அஞ்சி நடுங்கி வீட்டிற்குள் முடங்கியுள்ள நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கொரோனாவை கண்டு அஞ்ச வேண்டாம் என்பதை குறிப்பிடும் வகையில் கவிதை ஒன்றை எழுதியுள்ளார். அந்த கவிதையில் அவர் கூறியிருப்பதாவது:

வாழ்க்கை கற்பிக்காததை சாவா கற்பிக்கும்?
ஏழ்மை கற்பிக்காததை இறைவனா கற்பிப்பான்?
சோகம் கற்பிக்காததை மோகமா கற்பிக்கும்?
தாகம் கற்பிக்காததை தடாகமா கற்பிக்கும்?

வாழ்...
ஏழ்மை இழிவன்று
அது செல்வத்தின் முதல் படி
தாகத்துடன் நட, தடாகம் தென்படும்

மோகமும், சாவதும், இறைவனும் இன்றியமையாததன்று
போவதும் வருவதும் போக்குவரத்தன்றி
வேறென்ன சொல்லு தோழா

என அந்த கவிதையில் குறிப்பிட்டு உள்ளார்.

வழக்கம்போல் கமல்ஹாசனின் இந்த கவிதைக்கு நெட்டிசன்கள் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்டுக்களை பதிவு செய்து வருகின்றனர்.

More News

வீட்டு வாடகையை நானே செலுத்துகிறேன்: முதல்வர் அதிரடி அறிவிப்பு

உங்கள் வீட்டு வாடகையை நானே செலுத்துகிறேன் தயவுசெய்து 21 நாள் ஊரடங்கு உத்தரவை அனைவரும் பின்பற்றுங்கள் என்றும், யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்

தமிழகத்தில் மேலும் 8 பேர்களுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக தாக்கி வரும் நிலையில் இதுவரை தமிழகத்தில் 42 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்

நடிகர் விஜய் வீட்டில் திடீரென நுழைந்த சுகாதாரத்துறை அதிகாரிகள்? பரபரப்பு தகவல்

தளபதி விஜய் வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது தெரிந்ததே

நடு ரோட்டில் போலீஸ் தடுப்பை பயன்படுத்தி வாலிபால் விளையாடிய வாலிபர்கள் கைது

தமிழகம் முழுவதும் கடந்த 5 நாட்களாக ஊரடங்கு உத்தரவு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. அவசியத் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரும் நபர்களுக்கு

சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா: புதியதாக 5 பேர் பலி

சீனாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வூகான் என்ற மாகாணத்தில் கொரோனா வைரஸ் உருவாகி பரவ ஆரம்பித்தது